வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்குத்தொடர்பாக இன்று தொடர்ச்சியாக 4ஆவது முறை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏற்கெனவே சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இருதரப்பு வாதமும் நிறைவடைந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் மீண்டும் முருகனை வரும் மே 24ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து முருகன் மீண்டும் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் வரும் 24ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்க சைபர் கிரைம் எதிர்ப்பு