வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி, புதிதாக 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 325ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 950 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 25 பேர் உயிரிழந்தனர். இதனிடையே 31 ஆயிரத்து 970 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 696 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் தொற்று அதிகமுள்ள பகுதியாக வேலூர் தாலுக்காவும், குறைந்த தொற்றுள்ள பகுதியாக கே.வி.குப்பமும் உள்ளது.