தமிழ்நாட்டில் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வேலூரில் சிலர் பொழுதுபோக்கிற்காக வீட்டு மாடிகளிலிருந்து பட்டம் விடுகின்றனர். அப்படி பட்டம் விடுவோர் அரசால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்துகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டு விபத்து ஏற்படுத்துவோர் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரவேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து 0416 - 2258523, 2256966, 2256802 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரூரில் பத்திரிக்கையாளர்களுக்கு கரோனா பரிசோதனை - அமைச்சர் நேரில் பார்வை