ETV Bharat / state

வேலூரில் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு - வேலூரில் மணல் கொள்ளை

வேலூர்: ஆற்றில் மணல் திருடியபோது மணல் சரிந்து ஒருவர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக வேலூரில் மணல் கொள்ளையை தடுக்க சிறப்புக் குழு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

vellore
author img

By

Published : May 17, 2019, 7:41 AM IST

வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதியை மீறி தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் அள்ள அரசு தடைவிதித்தும்கூட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணல் கடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அரக்கோணம் அருகே ஆற்றில் மணல் திருடியபோது மணல் சரிந்து விழுந்ததில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் மணல் கொள்ளை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதி மீறி மணல் திருடிய விவகாரத்தில் ஒருவர் பலியான சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் வேலூர் மாவட்ட காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆற்றில் விதிமீறி மணல் அள்ளப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும்கூட முழுமையான அளவில் இந்த குழு செயல்பட்டு ஆற்றில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை மேலிட சம்பந்தம் இருப்பதால் மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Intro:ஆற்றில் மணல் திருடியபோது மணல் சரிந்த விபத்தில் ஒருவர் பலி எதிரொலி

வேலூரில் மணல் கொள்ளையை தடுக்க ஏடிஎஸ்பி தலைமையில் சிறப்புக் குழு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

Body:வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் விதியை மீறி அனுமதியின்றி தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது மணல் அள்ள அரசு தடைவிதித்தும் கூட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தினம் தினம் வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது இந்த சூழ்நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஆற்றில் மணல் அள்ளிய போது மணல் சரிந்து விழுந்ததில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது தங்கவேலு என்ற வாலிபர் தனது கூட்டாளிகளுடன் அனுமதி இன்றி நேற்றிரவு ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர் அப்போது மேடான பகுதியிலிருந்து மணல் சரிந்து விழுந்ததில் தங்கவேலு மூச்சுதிணறி உயிரிழந்தார். அவருடன் சென்ற மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதி மீறி மணல் அள்ளிய விவகாரத்தில் ஒருவர் பலியான சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் வேலூர் மாவட்ட காவல் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர் இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் விதிமீறி அள்ளப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார் இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் வேலூர் மாவட்ட காவல்துறையின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட முழுமையான அளவில் இந்த குழு செயல்பட்டு ஆற்றில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது அதாவது வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு விளங்கி வருகிறது கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நுழைந்து காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து வங்கக் கடலில் கலக்கிறது கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் வராமல் ஆறு வறண்டு கிடக்கிறது இதனால் மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் பாலாற்று நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர் தண்ணீர் பிரச்சினை ஒருபுறமிருக்க பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் ஆற்றின் வளம் பாழாகி வருகிறது இதனால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. பாலாற்றில் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குவாரி அமைத்து அனுமதி தரப்படுகிறது ஆனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறி அனுமதியின்றி வண்டிகளில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை காவல்துறை தரப்பில் அவ்வப்போது குழுக்கள் அமைக்கப்பட்டு மணல் கடத்தலை கண்காணித்தாலும் கூட இன்று வரை முழு அளவில் மணல் கடத்தலை கட்டுப் படுத்த முடியவில்லை இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை மேலிட சம்பந்தம் இருப்பதால் மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆற்றில் 30 அடி முதல் 60 அடி வரை பள்ளத்தில் மணல் அள்ளப்பட்டு உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது எனவே இனியாவது காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து ஆற்றில் மணல் கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.