ETV Bharat / state

வெடிமருந்து நிரப்பும் போது நிகழ்ந்த விபத்து - ஒருவர் படுகாயம்!

வேலூர்: கல்குவாரியில் வெடி வைக்க வெடிமருந்துகள் நிரப்பும் போது நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

author img

By

Published : Mar 15, 2020, 10:31 PM IST

கல்குவாரி வெடி விபத்து வேலூர் கல்குவாரி வெடி விபத்து குடியாத்தம் கல்குவாரி வெடி விபத்து Quarriying Of Stone Vellore Quarriying Of Stone Explosive accident Gudiyatham Quarriying Of Stone Explosive accident
Gudiyatham Quarriying Of Stone Explosive accident

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்திநகர்ப் பகுதியில் ரவி என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளுக்கு வெடி வைப்பதற்காக வெடி மருந்துகளை நிரப்பும் பொழுது, எதிர்பாராதவிதமாக வெடித்தது.

அதில், கல்குவாரியில் வேலை செய்யும் சௌந்தரராஜன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடி விபத்து நிகழ்ந்த கல்குவாரி.

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கல் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.