ETV Bharat / state

இது நமக்கான சிறை அல்ல; நாளைக்கான சுதந்திரம்!

திருப்பத்தூர்: வேலூர் மாவட்ட காவல் துறையினர் இது நமக்கான சிறை அல்ல; நாளைக்கான சுதந்திரம் என்னும் மையக்கருத்தைக் கொண்ட கரோனா வைரஸ் விழிப்புணர்வுக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

vellore police release corona awareness video

author img

By

Published : Apr 23, 2020, 12:48 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க மருத்துவர்களும், புதிய பாதிப்புகள் உருவாகாதவண்ணம் காவல் துறையினரும் ஒவ்வொரு நாளும் முழு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் வைரஸ் பரவலின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் வீடுகளுக்குள்ளே இருக்க ஒவ்வொரு நாளும், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே பாதுகாப்புப் பணியிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர். தாங்கள் எந்நேரமும் நோய்த் தாக்குதலுக்கு உள்படலாம் என்றறிந்தே தங்களது பணியில் தினமும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மக்களைப் பாதுகாக்க வேலூர் மாவட்ட காவல் துறை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்ட காவல் துறை களத்தில் பணியாற்றும் காவலர்களைக் கொண்டு, அவர்கள் நாளுக்குநாள் சந்திக்கும் இன்னல்களை விழிப்புணர்வுக் காணொலியாக வெளியிட்டுள்ளது. இந்தக் காணொலி காண்போர் மனதை நெருடும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: எமன் பொம்மை அணிந்து காவல் துறையினர் விழிப்புணர்வு

குடும்பங்களைத் தவிர்த்து, உணவுகளைத் தவிர்த்து, உடல்நிலையை மறந்து களப்பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையின் தியாகங்களை விளக்கும்விதமாகவும் இந்தக் காணொலி அமைந்துள்ளது.

வேலூர் மாவட்ட காவல் துறையினரின் கரோனா வைரஸ் விழிப்புணர்வு காணொலி

இதுபோன்ற காணொலிகளைக் கண்ட பின்னாவது, மக்கள் பெருந்தொற்று காலத்தில் தங்கள் கடமைகளை உணர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

களப்பணியாளர்களுடன், நாமும் மகிழ்ச்சியாய் இருக்க விழித்திருப்போம், தனித்திருப்போம், விலகியிருப்போம், வீட்டிலேயே இருப்போம். இது நமக்கான சிறை அல்ல; நாளைக்கான சுதந்திரம்!

இதையும் படிங்க: தனிமைப்படுத்திக் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? - சென்னை மாநகராட்சி வெளியிட்ட காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.