ETV Bharat / state

முதியோருக்கு உடனடி உதவி: அசத்தும் வேலூர் காவல் துறை

முதியோர் தங்களது பிரச்சினைகள், குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெறும்வகையில் வேலூர் காவல் துறை தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது. கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இந்தச் சேவையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

வேலூர் போலீஸ்
வேலூர் காவல்துறை
author img

By

Published : Jun 19, 2021, 12:28 PM IST

Updated : Jun 20, 2021, 6:17 AM IST

வேலூர்: இயற்கைப் பேரிடர், தொற்று நோய் பரவல் என எவ்வித இடர்கள் வந்தாலும், களத்தின் முன் நின்று பணியாற்றுவதில் காவல் துறையினருக்கு நிகரில்லை.

கரோனாவுக்கு எதிராக களப்பணி

கடந்தாண்டு கரோனா முதல் அலையில் தொடங்கி தற்போதுவரை அவர்களது களப்பணி அளப்பரியது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இல்லாத அந்த காலக்கட்டத்தில், தொற்று பரவலை ஊரடங்கு கணிசமாகக் குறைத்தது. அப்போது, விதிமீறல் நிகழாத வண்ணம், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கரோனா இரண்டாம் அலை

கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியபோது, அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பலர் தவித்துவந்தனர். இதில் ஆதரவற்ற முதியோர் கண்ட துன்பங்களை சொல்லிமாளாது.

முதியவருக்கு உதவும் காவல்துறை
முதியவருக்கு உதவும் காவல்துறை

முதியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் காவல் துறை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், காவல் துறையினர் மூலம் தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டம் ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குத் தனித்தனி உதவி எண்கள் வழங்கப்பட்டன.

முதியோர்களின் அனைத்து தேவைகள், குறைகளை தெரிவிப்பதற்கு இந்த உதவி எண்களை தொடர்புகொள்ளலாம். இத்திட்டம் வேலூரில் எந்தளவுக்கு முதியவர்களுக்கு பயனளிக்கிறது என்பதை அறியும் முனைப்புடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு களம் கண்டது.

கள நிலவரம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில், கடந்த மே 24ஆம் தேதி இத்திட்டம் வேலூரில் தொடங்கப்பட்டது. சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறை இயங்கிவருகிறது.

வேலூர் காவல்துறையினர்
வேலூர் காவல்துறையினர்

இங்கு மொத்தம் நான்கு காவலர்கள் முறையே, ஒரு சுழற்சிக்கு இரண்டு காவலர்கள் பணியாற்றிவருகின்றனர். தற்போதுவரை 200-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்பின் மூலம் 40-க்கும் மேற்பட்ட முதியோருக்கு உதவ முடிந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உதவிக்காக அழைப்போரிடம் கனிவாகப் பேசும் காவலர்கள், அவர்களை ஆற்றுப்படுத்தி, விரைந்து அவர்களின் தேவையை நிறைவேற்றுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இந்த உதவிகள் தடையின்றி செய்யப்படுகின்றன.

வேலூர் காவல் துறை

முதியோருக்கான உதவி எண்ணாக இருந்தாலும்கூட, கரோனா தொற்று நோயாளிகளுக்கான தேவைகள் தொடர்பாக வரும் அழைப்புகளுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கர்ப்பிணிகள், பெண்களுக்கான உதவி, மருத்துவ உதவி, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தல் என எவ்விதமான உதவியை கோரினாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சத்துவாச்சாரி உதவி காவல் ஆய்வாளர் ரங்கநாதன்

இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன், “கரோனா தொற்றால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு எனப் பிரத்யேகமாக உதவி எண்களை அறிவித்துள்ளோம். ஆனால் அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள், மருத்துவ உதவி தேவைப்படும் கரோனா நோயாளிகள் என அனைவருக்கும் இந்த எண் மூல உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. சில நேரங்களில் கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும் எங்கள் உதவியை நாடுகின்றனர்” என்றார்.

முதியோருக்கு உடனடி உதவி: அசத்தும் வேலூர் காவல் துறை

பொதுமக்களிடம் இது தொடர்பாக கேட்டபோது, “தேவையில் இருப்பவர்களுக்கும், தொண்டாற்றுபவர்களுக்கும் இடையே இந்த உதவி எண் பாலம்போல செயல்படுகிறது. காவல் துறையினரிடம் உதவிகளைக் கேட்கும்போது அது விரைந்து நிறைவேற்றப்படுகிறது“ என்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உதவி தேவைப்படுபவர்கள் கவனத்திற்கு... 94981 81358, 0416 2258898

இதையும் படிங்க: மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்

Last Updated : Jun 20, 2021, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.