ETV Bharat / state

ராணுவ உடையில் கஞ்சா கடத்தல்.. கேரளா குருவி சிக்கியது எப்படி?

author img

By

Published : Dec 3, 2022, 9:01 PM IST

ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு புல்லட் மூலம் கஞ்சா கடத்திய நபரை கைது வேலூர் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்
கஞ்சா கடத்தல்

வேலூர்: வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடக்கும் கஞ்சா கடத்தலை தடுக்க உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விரிஞ்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், தெள்ளூர் கூட்டுச் சாலையில் புல்லட் வாகனத்தில் ராணுவ சீருடையுடன் நின்ற நபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

ராணுவ சீருடை அணிந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து, ராணுவ வீரருக்கான அடையாள அட்டைக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ரகளை செய்துள்ளார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்டவர் கேரளாவைச் சேர்ந்த முகமது பஷீர் என்றும், ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

ஒடிசாவில் இருந்து ஆந்திரா, தமிழகம் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும், வழியில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பகலில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு ராணுவ வீரர் போல் உடை அணிந்து இரவில் மட்டுமே பயணம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கேரளாவிற்கு ராணுவ சீருடையில் கஞ்சா கடத்தியவர் கைது

ஒடிசாவில் கிடைக்கும் பர்ஸ்ட் குவாலிட்டி கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்க முகமது பஷீர் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் கூறினர். ஒடிசாவில் இருந்து வரும் வழியில் பல பகுதிகளில் டெலிவரி பாய் போல் கஞ்சா சப்ளை செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனார்.

இதையும் படிங்க: நாட்டிலேயே வரி வசூல் குறைந்த மாநிலம் தமிழகம்: அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.