வேலூர் ஆம்பூர் அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றங்கரையோரம் சிவன், சாமுண்டீஸ்வரி ஆகிய கோயில்கள் உள்ளன. நேற்றிரவு சிவன் கோயிலில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலை உடைத்து இரண்டாயிரம் ரூபாயைக் கொள்ளையடித்தனர்.
பின்னர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்துப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கு கவரிங் நகைகள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து அம்மன் தலையில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தைத் திருட முயன்றனர். அப்போது ஆட்கள் நடமாட்ட சத்தம் கேட்டதால், அவர்கள் கோயிலில் இருந்து தப்பிச் சென்றனர்.
காலையில் அம்மன் கோயில் பூசாரி வந்து பார்க்கும்போது, பீரோ உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் எந்த ஒரு பொருள்களும் திருடுபோகவில்லை என்பதும்; சிவன் கோயிலில் மட்டும் இரண்டாயிரம் ரூபாய் திருடுபோனதும் தெரியவந்தது.
இதுகுறித்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்புறம்பியம் கோயில் சிலைகள் மீட்பு - நான்கு பேர் கைது..!