வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (19). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு எட்டு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. மணிவண்ணன் தனியார் வங்கியில் வேலை செய்து வரும் நிலையில், ஹேமலாலசி இல்லத்தரசியாக இருந்துள்ளார்.
இதனிடையே, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றும் இதேபோன்று பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. மனைவியுடன் கோபித்துக் கொண்டு மணிவண்ணன் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஹேமமாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க : கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடை!