வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இந்திய செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் கால்களை இழந்த நபர்களுக்கு செயற்கைக் கால்கள், தையல் இயந்திரம், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
அதன்பின் முகாமில் பேசிய பன்வாரிலால் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”வேலூர் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கியது. குறிப்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திரப் போர் நடந்தது வேலூரில் தான். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை உள்ளது. தமிழ்நாடு கிளை சார்பில் ஏராளமான சமூகநலத் திட்டங்களை செய்து வருகிறது. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றுள்ள மருத்துவர்கள் , செவிலியிர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். " என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க: