வேலூர் கோட்டைக்கு நேற்றைய முன்தினம் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வந்துள்ளார். அப்போது, கோட்டையிலிருந்த மூன்று நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துள்ளனர்.
இதன்பின்னர் அந்தப் பெண்ணின் காதலனை சரமாரியாகத் தாக்கி அவர் கண்முன்னே அப்பெண்ணை மூன்று பேரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வுசெய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அப்பெண் தனது காதலனுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்துள்ளார். இதன்பின்பு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பெண்ணின் காதலனை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய மூன்று நபர்களில் ஒருவரை வடக்கு காவல்நிலைய தலைமை ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படையினர் கைதுசெய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள இருவரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்றோர்கள் பேசாததால் விரக்தி: ஒரே புடவையில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை!