வேலூர் மாவட்டம் பாகயம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட மூன்று பேர் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த அந்தச் சிறுமி கடந்த ஜூன் 13ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
90 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில் அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான கணபதி, ஆகாஷ் ஆகிய இரு இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் 17 வயதுடைய சிறுவன் என்பதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆபாசமாக புகைப்படம் எடுத்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞர்கள் போக்சோவில் கைது!