கரோனா தொற்றை தடுக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களும் தாமாக முன்வந்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை விற்பனையை நிறுத்திக்கொண்டனர்.
மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இறைச்சி கடை உரிமையாளர்கள் நேரில் முறையிட்டதால் இன்று (15.04.2020) முதல் அனைத்து வகை இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கடைகளில் விற்பனை செய்யாமல் ஆர்டரின் பேரில் வீட்டுக்கே கொண்டுச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகளில் விற்பனை செய்தால் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார்.