ETV Bharat / state

வேலூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று!

வேலூர்: புதிதாக 88 பேருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1211 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் கொரோனா
வேலூர் கொரோனா
author img

By

Published : Jun 29, 2020, 8:45 AM IST

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கரோனா நோய்க் கிருமித் தொற்றானது அதிகரித்து வருகிறது. ஜூன் 28ஆம் தேதி மேலும் 88 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1211 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் 327 பேர் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளை பொறுத்தவரை 900 படுக்கைகள் உள்ளது.

மேலும் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் யாரும் தேவையின்றி வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையில் கரோனா பாதித்த முதியவர் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.