வேலூர் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதாலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.