ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வேலூரில் அடுத்தடுத்த 3 நாட்களில்... நெகிழி ஒழிப்பு தீவிரம்!

வேலூர் : ஈடிவி பாரத் தமிழ்நாடு வெளியிட்ட செய்தி எதிரொலியாக நடைபெற்று வரும் இந்த தொடர் ரெய்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் அழிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Vellore  Banned plastics
Vellore Banned plastics
author img

By

Published : Dec 10, 2019, 10:26 PM IST

Updated : Dec 10, 2019, 11:21 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கடைகளில் கேரிபேக் நெகிழி பைகள், நெகிழித் தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக நெகிழிக்கு மாற்றாக மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்வதில் அரசு, தனியார் அமைப்புகள் தீவிரம் காட்டி வந்தன.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள், துணிப்பைகள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் நெகிழி மாற்றுப் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததாகவும், நாளடைவில் தற்போது வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கப்பட்டதாகவும் மகளிர் சுய உதவிக் குழுவினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்குப் பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், ' வேலூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை. அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, சில குடோன்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் தொடர்ந்து சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை அப்புறப்படுத்துவோம் ' என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஈடிவி பாரத்தின் இந்த செய்தி எதிரொலியாக மறுநாளே வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் தொடர்பாக திடீர் ரெய்டு நடத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அன்று வேலூர் கே.எம்.செட்டி தெருவில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இரண்டாவது நாளாக வேலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழு டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், வேலூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட மூன்று டன் நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வேலூரில் 3 நாளில் 12 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

அதன்படி இதுவரை மட்டும் வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட 12 டன் நெகிழிப் பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 18 லட்சம் ஆகும்.

'ஈடிவி பாரத் தமிழ்நாடு' வெளியிட்ட செய்தி எதிரொலியாக வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் ரெய்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அழிக்கப்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை!

Intro:வேலூர் மாவட்டம்

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி;

வேலூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை ஒழிக்க தொடர் ரெய்டு ; இதுவரை ரூ.18 லட்சம் மதிப்புள்ள 10 லட்சம் டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல்Body:தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது அதன்படி கடைகளில் கேரிபேக் நெகிழி பைகள் நெகிழி தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தடைசெய்யப்பட்டது இதன் காரணமாக நெகிழிக்கு மாற்றாக மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்வதில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தீவிரம் காட்டி வந்தன அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள் துணிப்பைகள் தயாரித்து வருகின்றனர் இந்தநிலையில் ஆரம்பத்தில் நெகிழிக்கு மாற்று பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததாகவும் நாளடைவில் தற்போது வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கப்பட்டதாகவும் மகளிர் சுய உதவி குழுவினர் குற்றம் சாட்டி இருந்தனர் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் ஈடிவி பாரத் பிரத்யேக பேட்டி கண்டது அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், வேலூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து சில குடோன்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் இதுதொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம் மேலும் தொடர்ந்து சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை அப்புறப்படுத்துவோம் என்று கூறியிருந்தார் அதை தொடர்ந்து ஈடிவி பாரத்தின் இந்த செய்தி எதிரொலியாக மறுநாளே வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் தொடர்பாக திடீர் ரெய்டு நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அன்று வேலூர் கே.எம்.செட்டி தெருவில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் கப்புகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேலூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர் அப்போது தடை செய்யப்பட்ட 3 டன் நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர் அதன்படி இதுவரை மட்டும் வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட 12 டன் நெகிழிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் 18 லட்சம் ஆகும். ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தி எதிரொலியாக வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த தொடர் ரெய்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அழிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுConclusion:
Last Updated : Dec 10, 2019, 11:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.