வேலூர்: திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் S.R.K அப்பு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் இன்று (டிச.21) நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், திமுக அரசை கண்டித்து, காட்பாடி, சத்துவாச்சாரி, அண்ணா கலையரங்கம் ஆகிய பகுதிகளில் அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதனிடையே அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய SRK அப்பு, 'சென்னை மேயராக "பிரியா குட்டி" என்ற 24 வயசு பொண்ணை போட்டு இருக்கு, திமுக அரசு. அந்த பொண்ணு ஒரு டம்மி பீசு, ஜோக்கர் மாதிரி பண்ணுறாங்க.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வடிவேலுவையே மிஞ்சிவிட்டது அந்த மேயர் அம்மா "பிரியா குட்டி". மேலும், தமிழகத்தில் கஞ்சா புழங்கும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. கஞ்சாவால் கொலை செய்யும் அளவிற்கு இளைஞர்கள் துணிந்துவிட்டனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டத்தில் இதுபோன்ற அட்டூழியங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பின் ரவுடிசம் அதிகமாகிவிட்டது' என்று பேசினார்.
இதையும் படிங்க: காரில் தொங்கியபடி பயணம்.. சென்னை மேயர் பிரியாவுக்கு சிக்கல்!