ETV Bharat / state

போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை நிறுத்த முடிவு: மத்திய அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்! - Scrapping of the post-matric scholarship scheme

வேலூர்: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்ததைக் கண்டித்து வேலூரில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிகவினர் ஆர்ப்பாட்டம்
விசிகவினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 7, 2020, 8:37 PM IST

11, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, பிரதமரின் பெயரில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைத்து தரப்பினருக்குமான புதிய கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 65 லட்சம் பட்டியலின மாணவர்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்போது புதிய திட்டத்தில் மொத்த பயனாளி மாணவர்களே 62 லட்சம்தான். இதைக் கண்டித்து வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமேதை அம்பேத்கர் மூலம் இந்திய அரசியல் சாசனத்தில் நிறைவேற்றப்பட்ட பட்டியலினம், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர் படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே அதனை உடனே கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.