வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி. குப்பம், பரதராமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தி காட்டி தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுவந்தன. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் காவல் துறைக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு குடியாத்தம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அணைகட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், அன்பழகன் என்பதும், பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து சுமார் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 2 ஆயிரம் பணம், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்
இதையும் படிங்க: 'பருப்பு, எண்ணெய் கிடைக்கல' - ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!