வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று (மே.16) விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பேரணாம்பட்டு பகுதியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அநாவசியமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைக் காவல் துறையினர் தடுத்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் மலைப்பகுதியில் காய்ச்சிய கள்ளச்சாராயத்தை குடியாத்தம் பகுதியில் விற்க எடுத்து செல்வது தெரியவந்தது. தொடர்ந்து, பேரணாம்பட்டு காவல் துறையினர் சாராயத்தைக் கடத்தி வந்த குடியாத்தம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (57), வடிவேலு (42) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 60 லிட்டர் கள்ளச்சாரம், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கைதானவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி