கரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரஸிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இருந்தும் ஒரு சில மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறையாமலிருந்துவருகிறது. இந்த நிலையில், நேற்று(செப்.25) வேலூர் மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 482ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 13ஆயிரத்து 25க்கும் மேற்பட்டார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 221 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் இன்று 67 பேருக்கு கரோனா தொற்று!