ETV Bharat / state

அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்ற கழக ஊழியர்கள் மூவர் கைது! - Government transport workers

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் வேலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர் பேருந்தை கல்லெறிந்து நொறுக்கியுள்ளனர்.

கல் எறியப்பட்டதில் உடைந்த பேருந்தின் கண்ணாடி

author img

By

Published : Feb 26, 2021, 3:46 PM IST

வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மூன்று அரசு பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று (பிப்.25) இரவு டி-சர்ட், ஸ்வட்டர் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் அங்கே நின்று கொண்டிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கினர்.

கல் எறியப்பட்டதில் உடைந்த பேருந்தின் கண்ணாடி
கல் எறியப்பட்டதில் உடைந்த பேருந்தின் கண்ணாடி
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் மற்றொரு பேருந்தின் மீது கல் எறிவதற்காக கந்தநேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரையும் கைதுசெய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (42), செந்தில்குமார் (37), நடத்துனர் தனஞ்செலியன் (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.