வேலூர்: காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் 17 வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று ஒரு லட்சத்து பத்தாயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளதாக, திருவள்ளூர் பல்கலைக்கழக துணை வேந்தர், டாக்டர் டி.ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று ( மே 29ஆம் தேதி) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாள சந்திப்பில், துணைவேந்தர் டாக்டர் டி.ஆறுமுகம், பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது, காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் 17 வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான திரு ஆர். என்.ரவி பங்கேற்று, ஒரு லட்சத்து பத்தாயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவைக்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் ,மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் மேலுல் கூறியதாவது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல், புதிதாக தமிழ், ஆங்கிலம், பொருளியல் , விலங்கியல், வேதியியல், கணிதவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நிறுவன செயலாண்மை, பயன்முறை இயற்பியல் உள்பட 11 ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளும், 3 முதுநிலை ஓராண்டு பட்டப்படிப்புகளும் துவக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த படிப்புகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் சேர்க்கை காலத்தை, மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறியிருப்பது தவறான செயல். எந்த ஒரு மாணவருக்கும் கல்லூரிகள் மூலமே மதிப்பெண் வழங்க முடியும் என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெயரில் ஒரு இருக்கையும், திருவள்ளுவர் பெயரில் ஒரு இருக்கையும் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிதி கிடைத்தவுடன் இவை செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்று தான் நம்புவதாக துணைவேந்தர் டாக்டர் டி.ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: குப்பைத் தொட்டியில் உணவு தேடும் பாகுபலி யானை: வனத்துறையின் நடவடிக்கை என்ன?