ETV Bharat / state

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் சேவை: காட்பாடியில் நின்று செல்ல வேலூர் எம்.பி. கடிதம்! - வேலூர் எம்பி டிஎம் கதிர் ஆனந்த்

சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் காட்பாடியில் நின்று செல்ல வேண்டும் என வேலூர் எம்.பி. டி.எம்.கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vande Bharat train
வந்தே பாரத் சேவை
author img

By

Published : Mar 31, 2023, 3:31 PM IST

வேலூர்: இரு நகரங்களுக்கிடையே விரைவான போக்குவரத்தை அளிக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் ரயில் சேவை தில்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான சேவை தொடங்கப்படவுள்ளது. இந்தச் சேவையை ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

சோதனை ஓட்டம்: இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வந்தே பாரத் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு கோவை சென்றடைந்தது. பின்னர் கோயிைலிருந்து பகல் 12:40 மணிக்கு புறப்பட்ட ரயில் மாலை 6.40 மணிக்கு மீண்டும் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் தொழில்நுட்பரீதியாக ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நவீன வசதிகள் இல்லாத தற்காலிக பயண அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும் மறுமார்க்கமாக சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும். சுமார் 495 கி.மீ தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிஷங்களில் கடக்கும். மேலும் இந்த சேவை புதன்கிழமை தவிர, அனைத்து நாள்களிலும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் 360 டிகிரி கோணமும் சுழலும் வகையில் இருக்கைகள், சிசிடிவி கேமரா, ரயில் ஓட்டுநரை நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டப் பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.8ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இத்துடன் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையையும் பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார். அதன் பின்னர், சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான முனையத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வந்தே பாரத் ரயில் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு வேலூர் எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நின்று செல்ல வேண்டும். காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடித விவரம், "சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலுர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை காட்பாடி, வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிந்து கொங்கு மாநிலம் உருவாக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.