வேலூர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்தவர், எழிலரசி (40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (மே.24) உயிரிழந்தார்.
செவிலியின் தாயார் பாப்பம்மாள் (60) கரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (மே.25) இரவு சிகிச்சைப் பலனின்றி பாப்பம்மாளும் உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் மகள், தாய் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர் மற்றும் அவ்வூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’