வேலூரில் அதிகமாக வாகனங்கள் செல்லக்கூடிய ஓல்டு பைபாஸ் சாலையில் கடைகள் நிரந்த பகுதிகளில் வாகனங்களை சாலையிலே நிறுத்தி செல்வதால் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட கண்காணிப்பாளருக்கு கைப்பேசி மூலம் தகவல் கொடுத்ததின் பெயரில் தகவல் அறிந்த வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கே வந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களையும் சாலையில் நெடுக்குமிடக்காக செல்லக்கூடிய வாகனங்களையும் போக்குவரத்து சரி செய்து தொடர்ந்து சாலையிலே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற வாகனங்களை இனிமேல் இந்த சாலையில் அனுமதியின்றி நிறுத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
பொதுமக்கள் கைபேசியில் தொடர்பு கொண்ட அடுத்து நிமிடத்திலேயே வந்த கண்காணிப்பாளருக்கு
அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் கடைக்காரர்களும் மிகுந்த பாராட்டை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்