திருப்பத்தூர் ஏலகிரி மலை அருகேயுள்ள புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் உமாராணி(19). தனியார் கல்லூரி ஒன்றில் இளம் வணிகவியல் படித்து வரும் இவர், சில வருடங்களுக்கு முன்பு தந்தை இறந்ததால் தாயாருடன் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து வரும் ஜெயலட்சுமி, இன்று வழக்கம் போல் மகள் உமாராணியை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றார். இந்நிலையில் வேலை முடிந்து மாலை ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்த போது, மகள் உமாராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் ஜெயலட்சுமியின் அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உமாராணியின் உடலை கீழிறக்கி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்தியப் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!