ETV Bharat / state

வேலூரில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பல் கைது - vellore

வேலூர்: வாணியம்பாடி பகுதியில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர்
author img

By

Published : Mar 21, 2019, 12:41 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை கே.எம். நகர் தெருவில் வசித்துவருபவர் அப்துல் ஆரிஃப். இவர் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். கடந்த ஒரு வருடமாக அப்துலின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது தாயாரை கவனித்துக்கொள்ள செவிலியர் வேண்டும் என்று அப்துல் பலரிடம் கூறிவந்துள்ளார். இதையறிந்த வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆபிதா என்ற பெண், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அப்துலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், அவரை நேரில் வந்து அழைத்துச் செல்லுமாறும் பேசியுள்ளார்.

இதையடுத்து, அப்துல், ஆட்டோ மூலம் ஆபிதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஐந்து பேர், அப்துலிடம் கத்தியை காட்டி பயமுறுத்தியுள்ளனர். மேலும் அவரை அரை நிர்வாணமாக்கி பெண் ஒருவருடன் புகைப்படம் எடுத்து பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பதறிப்போன அப்துல் தன் கையிலிருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தையும், ஐந்து ஏடிஎம் கார்டுகளையும் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை அந்த கும்பல் எடுத்துள்ளது. இதையடுத்து இரவு 10 மணிக்கு அப்துல்லை ஆட்டோ மூலம் பேருந்துநிலையத்தில் விடுவதற்காக கும்பலைச் சேர்ந்த ஒருவன் கூட்டிச்சென்றுள்ளான். அப்போது அப்துல் திடீரென கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் ஆட்டோவை மடக்கி இருவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் தொழிலதிபர் அப்துல் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினர் வாணியம்பாடியைச் சேர்ந்த ஆபிதா, தாரா, கோவிந்தராஜ், சதாம், சாது, அஸ்லாம், நதீம், மனோஜ்குமார், அசோன் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்தனர். இதையடுத்து பத்து பேரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் காவல் துறையினரால் அடைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:வாணியம்பாடியில் தொழில் அதிபரை நிர்வாணப்படுத்தி ஒரு பெண்ணை இணைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரூபாய் 3லட்சத்து 4 ஆயிரம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் கைது.வாணியம்பாடியில் தொழில் அதிபரை நிர்வாணப்படுத்தி ஒரு பெண்ணை இணைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரூபாய் 3லட்சத்து 4 ஆயிரம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் கைது.

அவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும்70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

Body:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை கே.எம். நகர் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ரப் ஆரிஃப் இவர் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார், கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது தாயாரை கவனித்துக்கொள்ள செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறிவந்தார்.இதை அறிந்த வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ஆபிதா என்ற பெண் கடந்த ஐந்து நாட்களாக இவரை செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், அவரை நேரில் வந்து அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூருக்கு சென்று மாலை டபுள் டக்கர் ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் மீண்டும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.இதனை கேட்டு அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அந்த பெண் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரு அறையில் அமர வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் திடீரென 5க்கும். மேற்பட்டோர் முகமூடி அணிந்து வந்த கும்பல் அறையில் நுழைந்து கத்தி மற்றும் ஆயுதங்களை காண்பித்து அவருடைய ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கி அவருக்கு அருகில் ஒரு பெண்ணை நிறுத்தி செல்போனில் படம் பிடித்துள்ளனர்.மேலும் எடுக்கப்பட்ட படத்தை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியும்,பணம் கொடுக்காவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் உயிருக்கு பயந்த அவர் தன்னிடம் இருந்த ரூபாய் 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய என்னை கத்தியை காட்டி மிரட்டி வாங்கிய பின்னர் அவரை ஆபிதா ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு.

ஏ.டி.எம்.கார்டினை எடுத்து சென்ற கும்பல் வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம். கார்டினை பயன்படுத்தி 2 லட்சத்துக்கான நகைகளை வாங்கியுள்ளனர்.மேலும் ஏ.டி.எம் கார்டினை பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் பயன்படுத்தி 1 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர்.

அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு தொழிலதிபரை கொண்டு சென்று விடுவதற்காக வந்துள்ளான் அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த போது தொழிலதிபர் திடீரென கூச்சலிட்டுள்ளார்.இதனை கேட்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தனர்,அப்போது ஆட்டோவில் இருந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் ஆட்டோவில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளான்,பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து அவனை மடக்கிபிடித்தனர்.

பின்னர் ஆட்டோவில் இருந்த தொழிலதிபரை மீட்டு இருவரையும் காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர், பின்னர் தொழிலதபர் அப்துல் ரப் ஆரிப் கொடுத்த புகாரின் பேரில் முதலாவதாக ஆட்டோவில் இருந்த ஒருவரை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி DSP முரளி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர்கள் சந்திர சேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் நாகூரில் மறைந்திருந்த ஜெயலாபுத்தினை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடியை சார்ந்த ஆபிதா, தாரா, கோவிந்தராஜ், சதாம், சாது, அஸ்லாம்,நதீம், மனோஜ்குமார்,அசோன் ஆகிய பத்துபேரை கைது செய்து குற்றவியல் நீதிதுறை நடுவர் காளிமுத்துவேல் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Conclusion:மேலும் இச்சம்பவத்தில் யாரேனும் சம்பந்தபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.