ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

author img

By

Published : Jul 21, 2020, 9:56 PM IST

வேலூர்: கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இன்று (ஜூலை21) போராட்டம் நடத்தினார்கள்.

கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில செயலாளர் ராஜா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (ஜூலை 20) உயிரிழந்தார்.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை சுமார் ஆறு டாஸ்மாக் பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.

அதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டாஸ்மார்க் கடைகளை மூடி வேலூரில் உள்ள அரசு மதுபான கிடங்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள், அப்படியும் அரசு கண்டுக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...'நகரா டாக்சிகள்.. வாழ்விழந்த டிரைவர்கள்'- கண்டுகொள்ளுமா அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.