திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்னமூக்கனூர் அல்ராஜ் வட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (43). இவர் அதே பகுதியில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், இவர் நேற்று இரவு தாமலேரிமுத்தூர் மதுபானக்கடையில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ரமேஷ் குமாரின் கையைக் கட்டி கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ரமேஷ்குமாருக்கும் அவரது உடன்பிறந்த சகோதரர்களுக்கும் இடையே நிலம் சம்பந்தமான முன்விரோதம் இருந்ததாகவும் அதனால்தான் கொலை நடந்தது எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 3 பேர் கைது!