வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்காட்டில் உள்ளது திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம். இங்கு அலுவலக ஊழியராக பணியாற்றிய வேதபோதகன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.12) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு பல்கலைகழக சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக அனுமதி கேட்க ஊழியர்கள் துணை வேந்தரை சந்தித்த போது, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் துணை வேந்தர் தாமரைசெல்வியை கண்டித்து சுமார் 15-க்கும் மேற்பட்ட பல்கலைகழக ஊழியர்கள் பல்கலைகழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உயிரிழந்த அலுவலக ஊழியர் வேதபோதகனுக்கு மெழகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குன்னூரை மிரட்டும் கஞ்சா; ஒரே நாளில் மூன்று பேர் கைது!