ETV Bharat / state

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா; முன்னாள் குடியரசுத்தலைவர் பங்கேற்பு! - சிபி ராதாகிருஷ்ணன்

Vellore: வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் நடைபெற்ற ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் களைகட்டிய ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 3:55 PM IST

வேலூர்: வேலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஸ்ரீசக்திஅம்மாவின் 48வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்றைய முன்தினம் மூலமந்திர ஹோமம், நேற்று ஆயுஷ் ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி நாளான இன்று (ஜன.3) காலை 5 மணியளவில் நாராயணி பீடத்தில் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், சர்வ மங்கள நாராயணி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாராயணி பக்தசபா பக்தர்கள் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக நிகழ்ச்சி திடலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, காலை 11 மணியளவில் ஸ்ரீசக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகமும், பாத பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து 12 மணி முதல் ஸ்ரீசக்தி அம்மா பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிலையில், ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர்.

முன்னதாக, ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழா மற்றும் புத்தாண்டையொட்டி ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் நேற்றைய முன்தினம் சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து, நாராயணி பீடம் அறங்காவலர்கள் கூறுகையில், "இந்தியாவிலுள்ள மிகமுக்கிய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் ஸ்ரீசக்திஅம்மா. உலகம் முழுவதும் அன்பையும், ஞானத்தையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், மற்றவர்களுக்கு சேவை செய்வதே உள்அமைதி, நல்லிணக்கத்துக்கான பாதை என்பதை போதிக்கும் ஸ்ரீசக்திஅம்மா, 1992 ஆம் ஆண்டில் அவரது 16 வயதில் வேலூரில் உள்ள அவரது குடும்ப வீட்டை விட்டு வெளியேறி, வேலூர் அருகே திருமலைக்கொடியில் குடியேறினார்.

அங்கு கைலாஷ் கிரி மலையின் அடிவாரத்தில் தங்கி, தொடர்ந்து ஆன்மீக சேவைகளை மேற்கொண்டு வந்த ஸ்ரீசக்தி அம்மா, 1995ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயணி பீடம் என்ற ஆன்மீக மையத்தையும் நிறுவினார். பின்னர், 2004ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் மூலம் இலவச மருத்துவம், ஸ்ரீ நாராயணி பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி என ஏராளமான மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அளித்து வருகிறார்.

தொடர்ந்து, நாராயணி பீடம் சார்பில் 1,700 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட பொற்கோயில் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. இக்கோயிலில் தரிசனம் செய்திட பல்வேறு மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 48ஆவது ஜெயந்தி விழா இன்று (ஜன.3) கோலாகலமாக நடைபெற்றது" என்றனர்.

இதையும் படிங்க: குட்லஷா அவுலியா தர்கா உரூஸ் பண்டிகை..! ராணிப்பேட்டையில் கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.