வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காவல் துறை சார்பில் நடமாடும் நவீன கபசுரக் குடிநீர் வழங்கும் வசதி, கொண்ட கை கழுவும் வாகனத்தை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் காட்பாடியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கபசுரக் குடிநீர், கை கழுவும் திரவம் சென்சாரின் அடிப்படையில் தானாக வழங்கப்படுகிறது. இந்த நவீன வாகனம் தினந்தோறும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று சேவையாற்றும். இதனை மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்