ETV Bharat / state

விவசாய நிலங்களுக்கு தினமும் ஒற்றை யானை விசிட் - அச்சத்தில் ஊர் மக்கள்! - single elephant destroy crops at farming land at vellore

வேலூர்: வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றை யானை
ஒற்றை யானை
author img

By

Published : Feb 17, 2020, 5:13 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஆந்திர தமிழ்நாடு எல்லையோரமுள்ள டி.பி.பாளையம் கிராமத்தில் சமீபத்தில் ஒற்றை யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்து அதே இடத்தில் புதைக்கப்பட்டது. உயிரிழந்த யானையுடன் வந்த மற்றொரு யானை, ஏற்கன்வே ஒரு யானை இறந்த இடத்திற்க்கு இரவு நேரத்தில் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், குடியாத்தம் வனத்துறையினர் டி.பி.பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் முகாமிட்டிருந்தனர்

இந்நிலையில்,நேற்று மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து, உடனடியாக வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டினர். மேலும் ஒற்றை யானை அனுப்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்

ஒற்றை யானையை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:சேலம் நாம மலையில் திடீர் தீ - பல்வேறு மரங்கள் சேதம்

For All Latest Updates

TAGGED:

vellore news
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.