ETV Bharat / state

வேலூருக்கு அமித்ஷா வருகை: பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்ட ஏற்பாடு தீவிரம் - unionhome minister amit shah

பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் விதமாக நாளை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அமித்ஷாவின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

security has been strengthened in vellore due to visit of amit shah
வேலூருக்கு அமித்ஷா வருகையினால் ட்ரான்கள், ராட்சத பலூன்களுக்கு தடை
author img

By

Published : Jun 10, 2023, 11:04 PM IST

வேலூர்: பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் விதமாக பாஜக கட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

வேலூருக்கு நாளை(ஜூன்11)மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி (Amit Shah visits Vellore), மாவட்டம் முழுவதும் 1,200 போலீஸார், துணை ராணுவம் உள்பட 1,400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் பாதுகாப்பின் முன்னேற்பாடாக வேலூர் மாவட்டத்தில் ட்ரான்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் கட்சியின் நிர்வாகிக் கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நாளை மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பொதுகூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமை வகிக்கிறார். மாவட்டத் தலைவர் ஜெ.மனோகரன் வரவேற்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, சென்னையில் இருந்து நாளை பிற்பகல் 2 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் விமானநிலையத்துக்கு வருகிறார் அமித்ஷா.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கந்தனேரி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் கார் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். அமித்ஷா வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஐஜி என்.கண்ணன், வேலூர் சரக காவல் துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துச்சாமி ஆகியோரின் மேற்பார்வையில் 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 1200 போலீஸார் மற்றும் துணை ராணுவம் என 1,400 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பள்ளிகொண்டா மற்றும் கந்தனேரி பகுதி முழுவதும் பல்வேறு கட்டுபாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி அப்பகுதியில் ட்ரான்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Amit Shah visits Vellore: அமித்ஷா வருகை; பாதுகாப்பு வளையத்துக்குள் வேலூர்.. ட்ரோன்கள் பறக்கத் தடை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.