ETV Bharat / state

செய்தியாளர் மீது திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்குதல்: ஒருவர் கைது - reporter and videographer were attacked by politicians

வேலூரில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது சுயேச்சை வேட்பாளரின் மகனும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

உள்ளாட்சி தேர்தல்  தேர்தல்  ஊரக உள்ளாட்சி தேர்தல்  செய்தியாளர் மீது தாக்குதல்  தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்  வேலூரில் செய்தியாளர்கள் தாக்குதல்  செய்தியாலர்கள் மற்றும் ஒலிப்பதிவாளர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்  வேலூர் செய்திகள்  vellore news  vellore latest news  election  local body election  reporter and videographer attack  reporter and videographer were attacked by politicians  reporter and videographer were attacked by politicians in vellore
செய்தியாளர் மீது தாக்குதல்
author img

By

Published : Oct 7, 2021, 10:23 AM IST

வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 6) ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குள்பட்ட இராமலை ஊராட்சியில் உள்ள 3, 4 ஆகிய வார்டுகளுக்கான வாக்குப்பதிவு, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடைபெற்றது.

மெத்தமாக 1000-க்கும் மேற்பட்டோர் உள்ள இந்த ஊராட்சியில், இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் கடந்த தேர்தல்களில் அமைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒரே ஒரு வாக்குச்சாவடி மையம் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் வாக்குகளைச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள்ளாகினர்.

தாக்குதல்

மேலும் ஒரே ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மட்டுமே உள்ளதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மதியம் வாக்களிக்க வந்த பலரும் நீண்ட நேரமாகியும் வாக்களிக்க இயலாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், இந்தச் செய்தியினைச் சேகரித்துவிட்டு, அருகே உள்ள நடுநிலைப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த 66ஆவது வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு நிறைவடைவதை நேரலையில் வழங்கத் தயாராகினார்.

அங்கு, வாக்குச்சாவடிக்குள் முகவராக அமர்ந்திருந்த கிராம ஊராட்சி வார்டு வேட்பாளர் பார்வதி என்பவரின் மகன் திடீரென தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை வெளியே போகும்படி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அவர் செய்தியாளருக்கான அனுமதி அடையாள அட்டையைக் காண்பித்தப் பின்னரும், அவரை வாக்குச்சாவடியில் இருந்த திமுக பிரமுகர் உள்ளிட்ட சிலர் சட்டையைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர்.

கண்டனம்

அச்சமயம் தொலைக்காட்சியில் நேரலை எடுக்கப்பட்டிருந்ததால், செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டது முழுவதும் நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினரும் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தாமல் செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் அங்கிருந்து அனுப்புவதிலேயே இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர், ஒளிப்பதிவாளர் அமைதியான முறையில் அங்கிருந்து நகர்ந்துசென்றார். செய்தியாளரைத் தாக்கிய நபர்கள் விடாமல் விரட்டிவந்து தாக்குவதிலேயே முனைப்பாக இருந்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர், குடியாத்தம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமமூர்த்தியிடம் புகார் மனு அளித்தார். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பல்வேறு பத்திரிகையாளர்கள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று (அக்டோபர் 7) வேட்பாளர் பார்வதி என்பவரின் மகன் குமரவேல் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: திடீரென வாக்களிக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் - இரவு 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.