ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கொண்டுசென்ற இருவர் கைது - ரத்தினகிரி புகையிலை பொருட்கள் கடத்தல்

ராணிப்பேட்டை: ரத்தினகிரியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டுசென்ற இரண்டு பேரை வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ranipet police seized banned tobacco products and 2 arrested
2 பேர் கைது
author img

By

Published : Dec 13, 2019, 11:23 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற பொலிரோ வாகனத்தை காவல் துறையினர் மறித்தபோது உள்ளேயிருந்த இருவர் தப்ப முயன்றனர்.

அவர்களைப் பிடித்த காவலர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது உள்ளே தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் வேலூர் ஆர்.என். பாளையத்தைச் சேர்ந்த அப்புரோஸ் (34), சையத் அமீன் (24) என்பது தெரியவந்தது. மேலும் பெங்களூரிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை ஏற்றிவந்து காஞ்சிபுரம் எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

இதையடுத்து போதைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய சோதனையில் நேற்று ஒரு டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொண்டுசென்ற 2 பேர் கைது

இதையும் படியுங்க: கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!

Intro:ராணிப்பேட்டை மாவட்டம்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்ற 2 பேர் கைது ; வாகனம் பறிமுதல் - வாகன தணிக்கையில் போலீசார் அதிரடிBody:ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் திடீர் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்துக்கு இடமான வகையில் பொலிரோ வாகனம் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை போலீசார் மறித்தபோது உள்ளே இருந்த 2 நபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்த போலீசார், வாகனத்தை ஆய்வு செய்தபோது உள்ளே தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்த்து. தெரியவந்த்து. உடனே அந்த நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த அப்புரோஸ்(34), சையத் அமீன்(24) என்பதும் பெங்களூரில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களக ஏற்றி வந்து காஞ்சிபுரம் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போதை பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் நடத்திய சோதனையில் ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த்து குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.