வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகல் பாராமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும், கால்வாய் நீரும் கலந்திருப்பதால் பொதுமக்கள் நோய்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். இதனால் நகராட்சி அலுவலர்கள் விரைந்து இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.