வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று (ஆக.17) காலை 11:40 மணியளவில், முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் ஓரத்தில் கவனக்குறைவாகக் கடந்து செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக, சரக்கு ரயிலின் கீழே நுழைந்து சென்று விடலாம் என்று முதியவர் நினைத்துக்கொண்டிருந்த போது, வண்டி புறப்பட்டுவிட்டது.
இதைப் பார்த்த பணியிலிருந்த காட்பாடி ரயில்வே காவலர் வினோத், தலைமைக் காவலர் சண்முகம் ஆகிய இருவரும், ஓடிச்சென்று முதியவரைப் பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. முதியவரைக் காப்பாற்றிய ரயில்வே காவல் துறையினரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் சிறுவர்கள் போல் அட்டகாசம்