ETV Bharat / state

ரயில் கொள்ளையைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! - Railway police

வேலூர்: சேலம் மாவட்டத்தில் ரயில்வே சிக்னல்களில் ரயில்களில் நின்றபோது, கொள்ளையர்கள் புகுந்து பயணிகளிடம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் வேலூர் மாவட்ட ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய
author img

By

Published : May 10, 2019, 10:48 AM IST

சேலம் மாவட்ட ரயில்வே சிக்னல்களில் ரயில்கள் நின்றபோது, கொள்ளையர்கள் புகுந்து பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சேலத்தை தொடர்ந்து அருகில் உள்ள மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள், ரயில்களில் கொள்ளையர்களின் அத்துமீறலை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்

இதனைத்தொடர்ந்து ரயில் நிலையங்கள், ரயில்வே சிக்னல்களில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே காவல் துறையினருடன் தமிழ்நாடு காவல் துறையினரும் இணைந்து 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிளித்தான்பட்டறை ஜாப்ராபேட்டை ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓடும் ரயில்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளதாகவும், பயணிகளின் நலன் கருதி சந்தேகப்படும்படியாக அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது ரயிலில் ஏறினால் அவர்களை சுட்டுப்பிடிக்கவும் காவல் துறை உயர் அலுவலர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சேலம் சம்பவம் எதிரொலி

வேலூர் மாவட்டத்தில் ரயில் கொள்ளையை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் சிக்னல்களில் ரயில்கள் நிறுத்தப்படும்போது கொள்ளையர்கள் புகுந்து பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது இந்த நிலையில் சேலத்தை தொடர்ந்து பக்கத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கொள்ளையர்களின் அத்துமீறலை தடுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு  ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார் அதன்படி வேலூர் மாவட்டத்திலும் ரயில் கொள்ளையை தடுக்க ரயில்வே எஸ்.பி நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் சேலம் உள்கோட்ட  டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் துரை உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் சிக்னல்களில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ரயில்வே போலீசாரும் தமிழக போலீசாரும் இணைந்து இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி ரயில் நிலையங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இரவு பகல் என 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடியில் கிளித்தான்பட்டறை ஜாப்ராபேட்டை ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓடும் ரயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பயணிகளின் நலன் கருதி சந்தேகப்படும்படியாக மர்ம நபர்கள் யாராவது ரயிலில் ஏறினால் அவர்களை சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது திடீரென வேலூர் மாவட்டம் முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.