வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து தமிழ்நாடு-ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகளில் மோர்தானா அணை அமைந்துள்ளது. ஆந்திராவில் அதிகளவு மழை பெய்து வருவதால் மலைகள் வழியாக மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அணைக்கு பின் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் ராட்சத மலைப் பாம்பு ஒன்று சிறிய குட்டை நீரில் விலங்குனை விழுங்கி கொண்டு அசைய முடியாமல் அங்கேயே ஊர்ந்து சென்றுள்ளது. அதனை, இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த காட்சி குடியாத்தம் பகுதிகளில் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் அனகோண்டா வந்து விட்டதாக பீதியை கிளப்பி வருகின்றனர்.
இது குறித்து குடியாத்தம் வனத் துறையினர் கூறுகையில்;
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பாம்பு அனகோண்டா வகையைச் சேர்ந்தது இல்லை. அது பெரிய அளவிலான மலைப்பாம்பு. மலைகிராமங்களில் உள்ளவர்கள் ஆடு, மாடு கோழிகள் உள்ளிட்டவைகளை கண்காணித்து கொள்ள வேண்டும்.
மேலும், விறகுகளை வெட்டவோ, ஆடு, மாடுகளை விளைச்சலுக்கு மேய்க்கவோ மாலை நேரங்களில் தனியாக யாரும் காட்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முழுக் கோழியை செரிக்க முடியாமல் துப்பிய மலைப்பாம்பு!