வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட மக்கான் அம்பேத்கர் நகர் குடியிருப்புப் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம்செய்ய, மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தூர்வாரும் பணியினை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பழைய கைத்துப்பாக்கியொன்று கால்வாயிலிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், கைத்துப்பாக்கியைப் பறிமுதல்செய்தனர். பின்னர், இது உண்மையான துப்பாக்கியா? அல்லது போலி துப்பாக்கியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பறிமுதல்செய்யப்பட்ட துப்பாக்கி போலியென தெரியவந்தது.
இதையும் படிங்க: வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா உறுதி!