வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை 30 நாட்கள் பரோலில் வெளியிடக்கோரி அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, பத்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கவனித்துக்கொள்ள நளினிக்கு பரோல் கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு பரோலில் வெளியே வந்தார். பின்னர், நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் பத்மா தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து அவரின் பரோலை நீட்டித்து வந்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 26ஆம் தேதிவரை நளினியின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இதையும் படிங்க:30 நாள்கள் பரோலில் வந்த பேரறிவாளன்!