முன்னாள் தமிழ்நாடு சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இருதய கோளாறு காரணமாக அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வருகை தந்தார். அங்கு, பி.ஹெச். பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்த அவர், மருத்துவர்களிடம் அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். சுமார் அரைமணி நேரம் அங்கு இருந்துவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார்.