ETV Bharat / state

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி!

author img

By

Published : Jul 25, 2019, 8:25 AM IST

Updated : Jul 25, 2019, 10:53 AM IST

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்துள்ளார்.

நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட ஏழு பேர் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நளினி தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி நளினிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜூலை 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நளினிக்கு ஆறுமாத பரோல் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,

பரோலில் வெளியே வந்தார் நளினி!
  • பரோல் காலத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது,
  • அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கக் கூடாது

உள்பட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

நளினி
பரோலில் வந்தார் நளினி

இன்று காலை சரியாக 10 மணியளவில் வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனம் மூலம் வேலூர் ரங்காபுரம் சிங்கராயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நளினி தனது சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோருடன் தங்குகிறார். நளினி தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றிலும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர்
நளினி தங்கவுள்ள வீடு

Intro:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி மகள் திருமணத்திற்காக நாளை பரோலில் வெளியே வருகிறார் பாதுகாப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்Body:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் முருகன் நளினி உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் இதில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவரும் தனித்தனியே வேலூர் ஆண்கள் சிறையில் வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு கூறியது ஆனாலும் தமிழக ஆளுநர் இதுவரை 7 பேர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் உச்சநீதிமன்ற கருத்தை ஏற்று தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் அவரது கணவர் முருகன் சில மாதங்களுக்கு முன்பு சிறை வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர் மேலும் தங்களை விடுதலை செய்யாவிட்டால் கருணைக் கொலை செய்யும்படி தமிழக முதல்வர் மற்றும் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தனர் இந்த சூழ்நிலையில் நளினி தனது மகள் ஹரித்ரா வின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார் இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி நளினிக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அதன்படி கடந்த ஜூலை 5ஆம் தேதி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட்டார் அப்போது நளினிக்கு ஆறுமாத பரோல் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது அதன்படி பரோல் காலத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கூடாது உள்பட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து நளினி தரப்பில் அவரது தாயார் பத்மாவதி மற்றும் உறவினர் சத்தியா அது இருவரும் ஜாமின் வழங்கினர் எனவே எந்த நேரமும் நளினி பரோலில் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது இருப்பினும் பாதுகாப்பு காரணமாக தாமதம் ஏற்பட்டது நளினியை எங்கு தங்க வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து அறிக்கை தர வேலூர் மாவட்ட காவல்துறைக்கு சிறைத்துறை நிர்வாகம் கடிதம் எழுதியது அதன்படி காவல்துறையினர் வேலூர் வள்ளலார் அடுத்த ரங்காபுரம் புலவர் நகர் பகுதியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சங்கராயர் வீட்டில் நளினியை தங்க வைக்கலாம் என சிறைத்துறைக்கு அறிக்கை அளித்தனர் இருப்பினும் நளினி பரோலில் வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது இந்தநிலையில் நாளை காலை நளினி ஒரு மாத பரோலில் வெளியே வர உள்ளதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது நாளை காலை 8 மணிக்கு நளினி பலத்த பாதுகாப்புடன் வேலூர் ரங்காபுரம் புலவர் நகர் பகுதியில் உள்ள சிங்கராயர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் பின்னர் அங்கு ஒரு மாதம் தனது உறவினருடன் நளினி தங்க உள்ளார் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது நளினி நாளை பரோலில் வர உள்ளதாக சிறைத்துறை எங்களிடம் தெரிவித்துள்ளது எனவே காவல் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர் யார் தலைமையில் பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் தற்போது வேலூரில் தேர்தல் நடை பெற்றாலும் கூட நளினிக்கு பாதுகாப்பு வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்Conclusion:
Last Updated : Jul 25, 2019, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.