முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இந்த வழக்கில் தான் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும், தனது கணவரின் தந்தை உடல் நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள பரோல் வழங்கக்கோரியும்; நளினி கடந்த 3 தினங்களுக்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
மேலும் இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், தன்னை கருணைக் கொலை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில், இன்று நான்காவது நாளாக சிறையில் நளினி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக நளினி உணவு அருந்தாமல், தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக, சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், நளினியிடம் அலுவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள கணவர் முருகனை சிறை அலுவலர்கள் துன்புறுத்துகின்றனர் என்றும்; இதனால், தங்களை வேறு மாநில சிறைக்கு மாற்றும்படியும் தமிழ்நாடு உள்துறைக்கு நளினி நேற்று கடிதம் எழுதி இருப்பதாக, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
’கணவர் உண்ணாவிரதத்தை கைவிட்டால்தான் நான் கைவிடுவேன்’ - நளினி திட்டவட்டம்