ETV Bharat / state

வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்! - ஆயுள் தண்டனை கைதி

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Vellore Central Prison
murugan fasting in vellore central prison
author img

By

Published : Jun 7, 2020, 8:50 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர், முருகன்.

இவர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன், காணொலி அழைப்பின் மூலம் தொலைபேசியில் பேச அனுமதிக்கக் கோரி, ஜுன் 1ஆம் தேதி முதல் இன்று 7ஆவது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

உண்ணாவிரதத்தை கைவிடும்படி, அவரிடம் சிறைத்துறை அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

முன்னதாக முருகனுக்கு, இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கை காணொலியில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.