ETV Bharat / state

குடியாத்தம் அருகே அண்ணன் மகளை காதலித்த நபரை தட்டிக்கேட்ட சித்தப்பா கழுத்தறுத்து கொலை! - வேலூர் கொலை வழக்கு

Gudiyatham Murder: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுப்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Murder near Gudiyatham Police investigate whether it was a revenge killing or other issue
குடியாத்தம் அருகே அண்ணன் மகளை காதலித்த நபரை தட்டிக்கேட்ட சித்தப்பா கழுத்தறுத்து கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:10 PM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பகுதியில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் செல்வராஜ் (30) என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தீபாவளி நாளன்று குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் கும்பலுக்கும் மற்றொரு கும்பலுக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் அரங்கே இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளில் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த சிசிடிவி காட்சிகளில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இறந்த செல்வராஜின் அண்ணன் மனைவி சுதா என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலையைச் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க மோப்பநாய் தாராவை வரவைத்து, கவுண்டன்ய மகாநதி ஆறு மற்றும் குடியாத்தம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த கொலை மணல் கொள்ளையில் ஏற்பட்ட தகராறில் பழி வாங்குவதற்காக நடந்ததா? அல்லது வேறு காரணங்களுக்காக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காதல் விவகாரத்தில் தலையிட்டதால் செல்வராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்வராஜின் அண்ணன் மகளை ஜோதிபாஸ் என்ற நபர் காதலித்து வந்த நிலையில், அதை செல்வராஜ் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜோதிபாஸ் பெண்ணின் சித்தப்பா செல்வராஜை நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பட்டாசு வெடித்த இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது.. ஆவடி போலீசார் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.