ETV Bharat / state

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரை! - vellore

வேலூர்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாதனூரில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரை
author img

By

Published : Jul 27, 2019, 2:10 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரை

அந்த வகையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இன்று மாதனூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.

Intro:
மாதனூரில் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் 30 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு வேலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மாதனூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பரப்புரையில் பேசியதாவது.

தோல்வியை சந்தித்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கின்றோம் இத்தேர்தலில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்,

மேலேயுள்ள காங்கிரஸ் நிலையான இடத்தில் இல்லை அவர்கள் கீழ் இயங்கும் திமுகவும் நிலையாக இல்லை.

மேலும் கிராமப்புற மக்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்றியமைக்கப்படும் என்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

எதிர்கட்சி வேட்பாளர் இப்பொழுது தான் பொதுவாழ்க்கைக்கு வருகிறார் அவர்களுக்கு அரசியல் அனுபவம் தெரியாது ஆனால் நாங்கள் 50 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருந்து வருகிறோம்.

Conclusion: மேலும் பேசிய ஏ.சி.சண்முகம் நான் வெற்றி பெற்று வந்தால் வார கடைசியில் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து நோயில்லா மாவட்டமாக வேலூரை மாற்றியமைப்பேன் என பரப்புரை மேற்கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.